Wednesday, 16 July 2014

தோப்புக்கரணத்திற்கும், மூளைக்கும் என்ன தொடர்பு?.... கண்டிப்பாக தெரிந்துகொள்ளவும்.... Super Brain Yoga

மூளைக்கு என்ன பயிற்சி எனக் கேட்டால், பலரும் தலையை அமுக்கி விடுவது அல்லது மனனம் செய்வது அதாவது ஒன்றையே திரும்பத்திரும்ப சொல்லுதல் அல்லது செய்தல் எனக் கூறுவது வழமை....

விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போடும் மக்களை பார்த்திருப்பீர்கள். அப்படி தோப்புக்கரணம் போடுவதே மூளைக்கு சிறந்த யோகாசனமாம்.

Autism எனப்படும் மன இறுக்கம் கொண்ட குழந்தைகள் கூட இந்தத் தோப்புக்கரணத்தால் நலன் பெறுகிறார்களாம்.

அந்த நாட்களில் பாடசாலை மாணவர்கள் அவமானம் என நினைத்த தண்டனையான இந்தத் தோப்புக்கரணத்திற்கு அமெரிக்கர்கள் காப்புரிமை கூடப் பெற்றிருக்கிறார்களாம்...

எழுபதுகளில் ஒரு ஜெர்மானிய மருத்துவர் இந்தியா சென்ற போது, இந்தியர் பிள்ளையாரைப் பார்த்து தோப்புக்கரணம் போடுவதைப் பார்த்து விசித்திரமாக எண்ணவில்லை. அவர் இந்த விசித்திரமான செய்கையை ஆராய்ந்து அந்த நாட்டு மருத்துவ இதழில் இந்தத் தோப்புக் கரணம் உடலில் என்ன நன்மையைச் செய்யும் என விளக்கியிருந்தார்.

அவர் எழுதி இருந்தது என்னவென்றால், இடது காதுச் சோணையில் வலது கண் நரம்பின் முடிவிடமும், வலது காதுச் சோணையில் இடது கண் நரம்பின் முடிவிடமும் இருப்பதால் இவற்றைச் சீரான அழுத்தத்துடன் அமுக்கி விடுவதால் கண்களிரண்டும் நல்ல பயிற்சி பெறும் இதனால் பார்வைக் கோளாறுகள் வராது என்பதே.

அமெரிக்காவில் இப்போது அனேகமானோர் தோப்புக்கரணம் போட்டு விட்டுத்தான் வேலைக்குச் செல்கின்றார்களாம். இந்தியா, இலங்கையில் தொன்று தொட்டு செய்து வந்த விநாயகர் தொழுகையை இன்று அமெரிக்கரும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் உள்ள வித்தியாசம் விநாயகர் உருவத்தின் முன்பு அவர்கள் செய்யவில்லை என்பது தான்.

No comments:

Post a Comment